ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியா மற்றும் ரஸ்யா பங்கேற்கும் 19-வது உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகவே புட்டின் இன்று இந்தியா செல்கின்றார். புட்டினின் இந்தப் பயணத்தின் போது 36 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், இந்தியாவுக்கு வான்வழி பாதுகாப்பு ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் புட்டின் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ள நிலையில் நாளை இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன் புட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பி;டத்தக்கது