காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஒவ்வாnரு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளிலேயே பாhஸில்தான் காற்று மிக அதிகமாக மாசுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை நகர நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு;ளது.
அன்றையை தினம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இரு சக்கர வாகனங்கள், மிதி வண்டிகள் மற்றும் வீதியொயோர நடைபாதை ஆகியவற்றை பயன்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும், பொருட்களை விநியோகிக்கும் வாகனங்கள் மற்றும் மருத்துவ அவசர வாகனங்களுக்கு இந்த தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.