168
உக்ரைன் நாட்டுமக்களுக்கு ஹங்கேரி நாட்டு கடவுச்சீட்டுக்களை வழங்கியமையினையடுத்து ஹங்கேரி நாட்டுத் தூதரை ; வெளியேறுமாறு உக்ரைன் உத்தரவிட்டுள்ளது. ஹங்கேரியை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையின உக்ரைனில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஹங்கேரி கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இதற்கு பதிலடியாக உக்ரைன் நாட்டுத்தூதர் வெளியேற்றப்படுவார் என ஹங்கேரி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love