தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி லீ மயுங்-பாக் மீதான லஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு த்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த பொது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டு வழக்கு தொடர்ந்த நிலையில் சியோல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இவ்வழக்கின் விவாதங்கள் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்போது அவர் மீதான் ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமானதால் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன் 13 பில்லியன் வொன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெறும் 4-வது முன்னாள் ஜனாதிபதி லீ என்பது குறிப்பிடத்தக