இந்தியா மற்றும் ரஸ்யாவுக்கிடையே சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெறும்; இந்தியா-ரஸ்யா மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஸய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இந்தியா சென்றுள்ளார்.
இந்தநிலையில் இன்றையதினம் புட்டின் மற்றும் பிரதமர் மோடி இருவருக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின் இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபா டிபறுமிதியான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அத்துடன் சைபீரிய எல்லைக்கு அருகே ரஸ்யாவில் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்பு மையம் அமைக்கவும் ஒப்பந்தம் கையெழுத்தானது.