188
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினைத்தான் தெரிவு செய்து கொண்டார்கள.அவர்கள் எல்லாம் உண்மையிலேயே மகா ராஜாவுக்கு இருக்கக்கூடிய , வரையறை அற்ற அதிகாரங்கள் தான் இருந்தது.என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நீலப் பசுமை யுகத்தை நோக்கி அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப வருடாந்தம் மாவட்ட மட்டத்தில் இடம் பெறும் ‘வனரோபா’ தேசிய நிகழ்ச்சித் திட்டமும் சுற்றாடல் மாநாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (5) காலை மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
நாங்கள் இவ்வாறான சுற்றாடல் மாநாடுகளை நாட்டின் பல மாவட்டங்களிலும் நடாத்தி வருகின்றோம்.இலங்கையில் நடத்துகின்ற முதலாவது சுற்றாடல் மாநாடு இது அல்ல.நாடு பூராகவும் இவ்வாறான மாநாடுகளை நடாத்தி இருக்கின்றோம். அதே போன்று போதை வஸ்துக்கு எதிரான மாநாடுகளையும் பல மாவட்டங்களிலும் நடாத்தி இருக்கின்றோம். சிறுவர்களை பாதுகாப்பது தொடர்பான பல மாநாடுகளையும் நடாத்தி இருக்கின்றோம்.அந்த அனைத்து வேலைத்திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினூடாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நான் சுற்றாடல் அமைச்சை பொறுப்பேற்று கொண்டமை குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எனக்கு முன் இருந்த ஜனாதிபதிகள் அனைவருமே முதல் முதலாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட போது நிதி அமைச்சினைத்தான் தெரிவு செய்து கொண்டார்கள். ஆனால் நான் நிதி அமைச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு முன்னால் இருந்த ஜனாதிபதிகள் எல்லாம் உண்மையிலேயே மகா ராஜாவுக்கு இருக்கக்கூடிய அவர்களுக்கு வரையறை அற்ற அதிகாரங்கள் தான் இருந்தது.
நான் ஐக்கிய நாட்டு சபைக்கு சொன்னேன் நான் ஒரு மன்னனுடைய அதிகாரங்களில் அல்ல ஒரு பேரரசனின் அதிகாரங்கள் எல்லாவற்றையும் கைவிட்டுத்தான் இன்று இருக்கின்றேன் என தெரிவித்தேன். ஜனாதிபதியின் பொறுப்பை நீங்கள் எடுங்கள் என அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை விடுத்தேன். நான் பணத்தையும்,அதிகாரத்தையும் கைவிட்டு மக்களினுடைய சேவகனாக வந்துள்ளேன்.
எனக்கு பணம் தேவையில்லாத காரணத்தினாலேயே தான் நான் நிதி அமைச்சைக்கூட பெற்றுக்கொள்ளவில்லை. இன்னும் ஒரு வருடங்களுக்கு பிறகு தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதி அவர்களுக்கு இன்று எனக்கு இருக்கக்கூடிய அதிகாரங்கள் கூட அவருக்கு இருக்கப்போவதில்லை.
அவை எல்லாவற்றிக்கும் முன் நின்று செயல் பட்டவன் நான் தான்.நாங்கள் ஏன் இந்த சுற்றாடலைப்பற்றி பேசுகின்றோம். இந்த சுற்றாடல் முழு உலகத்திலும் பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. சுற்றாடல் பிரச்சினையினால் உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. இதனால் உலகத்தலைவர்கள் அனைவரும் சுற்றாடலைப் பற்றி பேச ஆராம்பித்து விட்டனர். பல ஆண்டுகளுக்கு முன்பதாக உலகத்தில் இருக்கக்கூடிய பல அபிவிருத்தி வேளைகள் எல்லா வற்றையும் பற்றி பேசிய அந்த விஞ்ஞானிகள் அந்தக் காலத்திலே இந்த சுற்றாடலைப்பற்றி பேசவில்லை.
ஆனால் அனைவரும் அப்படியல்ல.சுற்றாடலைப்பற்றி சிந்தித்த விஞ்ஞானிகளும் இருக்கத்தான் செய்கின்றார்கள். சுற்றாடலைப்பற்றி உலகத்திற்கு போதித்தவர் புத்தர் அவர்கள். மரம்,செடி,கொடிகள் மற்றும் அல்ல இயற்கை வளங்களை பாதுகாப்பது பற்றி போதித்தார்.
-அதே போன்று கிறிஸ்தவ, இந்து,இஸ்ஸாம் மதங்களிலும் இதைப்பற்றி போதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத போதனைகளிலும் இந்த சுற்றாடலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. அல்பட் என்ற விஞ்ஞானி சொல்லி இருக்கின்றார் என்னைத்தவிர அனைத்துமே சுற்றாடல் தான்.
-நாங்கள் இன்று இருப்பது மிகவும் கஸ்டத்தில் தானே.காடு அடர்த்தி மிகவும் குறைவடைந்த மாவட்டம் ஹம்பகா மாவட்டம்.நூற்றிற்கு 2 வீதமான காடு அடர்த்தி அந்த மாவட்டத்தில் இருக்கின்றது.அடுத்ததாக காடு அடர்த்தி குறைந்த மாவட்டம் கொழும்பு மாவட்டம்.அங்கே நூற்றிற்கு 3 வீதம் தான் காடு அடர்த்தி காணப்படுகின்றது.
.மூன்றாவதாக இலங்கையிலே காடு அடர்த்தி குறைந்த மாவட்டம் யாழ் மாவட்டம்.அங்கே 5 வீதமான காடு அடர்த்தி காணப்படுகின்றது.நான் மன்னார் மாவட்டத்திற்கு வந்து மிகவும் சந்தோசப்படக்கூடிய விடயத்தை கூறுகின்றேன். -இலங்கையிலேயே காடு அடர்த்தி கூடிய பிரதேசங்களில் மூன்றாவது இடத்தில் மன்னார் மாவட்டம் காணப்படுகின்றது. நூற்றுக்கு 63 வீதம் காடு அடர்த்தி மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்றது.
மனிதர்களைப் போன்று மிருகங்களுக்கு வாழ்வதற்கு அவசியம் என்ன என்று தெரியுமா? முதலாவது ஒட்சிசன் தேவைப்படுகின்றது. அடுத்ததாக நீர் தேவைப்படுகின்றது.அடுத்ததாக உணவு தேவைப்படுகின்றது. இந்த மூன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் காடுகள் இருக்க வேண்டும்.
இந்தியாவின் டில்லி நகரத்தில்,சீனாவின் நகரத்தில்,ஒட்சிசன் இல்லையென்று ஒட்சிசன் நிறப்பப்பட்ட போத்தல்களை கைகளில் வைத்துக்கொண்டு அவர்கள் வீதிகளில் நடந்து செல்கின்றனர். அதனால் எமது நாட்டிலே அதிகமான மரங்களை வளர்ப்பதற்காக இந்த செயல்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். ஒக்டோபர் மாதத்திலே இதனை நடத்த வேண்டும் என்பதற்காக இங்கே அதனை நடத்துகின்றோம். 10 இலட்சம் மரங்களை வளர்க்க வேண்டும் என்று நாங்கள் முற்று முழுதாக எதிர் பார்க்கின்றோம்.
ஆனால் 50 இலட்சத்தை இலக்காக வைத்து தான் வேளைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். உங்களைப்போன்று இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒத்தழைப்பு வழங்கினால் 50 இலட்சத்தை நாங்கள் தாண்டிப்போக முடியும்.இந்த சவால் மிகவும் பாரதூரமான ஒரு சவால்.மன்னார் மாவட்டத்தில் இயற்கை வளங்களின் அழிவு தொடர்பான காட்சிகளை பார்த்தீர்கள் தானே? இந்த அழிவுகளுக்கு யார் காரணம்? இங்கு வருகை தந்த அரசாங்க அதிபர், பிரதேசச் செயலாளர்கள்,இங்குள்ள அரச அதிகாரிகள் ஆகியோரே காரணம்.அரச அதிகாரிகள் மட்டுமல்ல பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் பொறுப்பு கூற வேண்டும். தவறு செய்பவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்
Spread the love