அகில இலங்கை பாடசாலை விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா ஜானதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (05) பிற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. நாட்டிலுள்ள நாற்பத்தைந்து இலட்சம் பாடசாலை மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தையும் விளையாட்டு திறன்களையும் கட்டியெழுப்பவும் தேசிய மட்டத்தில் அவர்களிடம் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணரவும், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 34வது தடவையாகவும் ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
நாட்டின் 39,000 க்கும் மேற்பட்ட பாடசாலை பிள்ளைகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இவ்விளையாட்டு விழாவில் 29 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி வெற்றிக் கிண்ணங்களை வழங்கிவைத்தார்.கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.