சர்வதேச காவற்துறை அமைப்பின் (இன்டர்போல்) இயக்குநர் மெங் ஹாங்வேயை (Meng Hongwei) காணவில்லை என அவரது மனைவி அளித்துள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் பிரான்ஸ் காவற்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.
சர்வதேச அளவிலான பொருளாதார, போதை மற்றும் கிரிமினல் குற்றங்களை தடுக்க உலக நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச காவற்துறையின் (இன்டர்போல்) தலைவராக சீனாவை சேர்ந்த மெங் ஹாங்வே கடந்த 2016-ம் ஆண்டு பொறுப்பேற்றார். இந்நிலையில், அவர் மாயமாகியுள்ளதாக மனைவி முறையிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லைய்ன் நகரில் வசித்த அவர் அண்மையில் சீனா சென்றதாகவும், அப்போதிருந்து திரும்பி வரவில்லை, எந்த தகவலும் இல்லை என மனைவி காவற்துறையில் முறையிட்டுள்ளார்.. இதனை அடுத்து, பிரான்ஸ் காவற்துறை தீவிர தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.