இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஆயிரம் ஓட்டங்களை எடுத்துள்ள குவித்து சாதனை படைத்துள்ளார். ராஜ்கோட்டில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் கோலி 139 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
இதன்மூலம் 24-வது சதத்தை எட்டிய கோலி பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார். 72-வது டெஸ்டில் விளையாடும் கோலி 123 இன்னிங்சில் துடுப்பாடி 24 சதங்களை அடித்துள்ளார். கோலி இந்த ஆண்டில் இதுவரை 4 சதம், 4 அரைசதங்கள் உள்பட 1,018 ஓட்டங்கைளப் பெற்றுள்ள நிலையில் இந்த ஆண்டில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் 10 டெஸ்டில் 719 ஓட்டங்களை எடுத்துள்ளார். கோலி ஏற்கனவே 2016-ம் ஆண்டில் 1,215 ஓட்டங்களும் 2017-ம் ஆண்டில் 1,059 ஓட்டங்களும் எடுத்துள்ளதனால் தொடர்ந்து 3 ஆண்டுகளில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த முதல் இந்தியர் இவர் என்பதுடன் உலகளாவிய ரீதியில் 6-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.