கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் இரு பெண்கள் உட்பட ஐவரை கைதுசெய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனனர். கொழும்பு கிராண்ட்பாஸ் மாவத்தை பகுதியில் வைத்தே இவர்கள் ஐவரும் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்து சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான 650 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளை காவற்துறையினர் மீட்டுள்ளனர். காவற்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் காவற்துறையினர் அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு கிராண்ட்பாஸில் இரு பெண்கள் உட்பட ஐவர் கைது…
135
Spread the love