குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ‘செமட்ட செவண’ தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வாழிகாட்டலில் மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார் புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று சனிக்கிழமை காலை 9 மணிளவில் வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டு குறித்த 50 வீடுகளையும் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
இதன் போது மன்னார் தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைக்கப்பட்ட 134 ஆவது மாதிரிக் கிராமமான ‘வளனார் புரம்’ மாதிரிக்கிராமத்தில் அமைக்கப்பட்ட 50 வீடுகள் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டுள்ளதோடு, வீட்டிற்கான ஆவணங்களும் கையளிக்கப்பட்டது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மூக்குக்கண்ணாடிகள், சுயதொழில் பொருட்கள்,நிதி உதவிகள் என்பன வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ், அரசியல்பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.