குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….
ஊற்றுப்புலம் குளப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஊற்றுப்புலம் பகுதியில் பத்தொன்பது மில்லியன் ரூபாவில் ஆரம்பிக்கப்பட்ட ஊற்றுப்புலம் குளம் அமைக்கும் பணியினை மேற்கொள்வதற்கு வன வளத்தினைகளம் இடையூறு செய்து நிறுத்தி வைத்திருப்பதாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் நீர் பிரச்சினைக்களுக்கு ஊற்றுப்புலம் குளம் அமைக்கப்படும் இடத்து தீர்வு கிடைக்கும் என்றும் ஆனால் வனவளத் திணைக்களத்தினர் தடையாக உள்ளனர் எனத் தெரிவித்து ஊற்றுப்புலம் கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுதந்திரக் கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரையும் ஊற்றுப்புலம் குளம் அமைக்கும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தகவல்களை அனுப்புமாறு பிரதி விவசாய அமைச்சர் பணித்ததற்கு அமைவாக நேற்று (06.10.18) பிற்பகல் குளம் அமைக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பான தகவல்களை பிரதி விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.