Home இலங்கைமந்துவில் நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு….

மந்துவில் நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிப்பு….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

135 ஆவது மாதிரிக் கிராமமாக அமைக்கப்பட்டுள்ள மேற்படி மாதிரிக் கிராமத்தின் வீடுகளை இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பொது மக்களிடம் உத்தியோகப்பூர்வமாக கையளித்துள்ளார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் ஆலோசனையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நாட்டின் பல பகுதிகளிலும் மாதிரிக் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அமைக்கப்பட்ட 135 ஆவது மாதிரிக் கிராமமாக நாவலர் கோட்டம் மாதிரிக் கிராமம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More