271
நக்கீரன் பத்திரிகையின் தலைவரான நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் பணியில் தலையிட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், நக்கீரன் கோபாலை சென்னைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்து புனே செல்லவிருந்த போது விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தன மரக் கடத்தல் வீரப்பனுடன் தொடர் நேர்காணல் நடத்தியதன் மூலம் பிரபலமான கோபால் தமிழக அரசுக்கும் – வீரப்பனுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love