Home இலங்கை நாமல் உள்ளிட்டோருக்கெதிரான வழக்கில் பிரதான சாட்சியிடம் விசாரணை

நாமல் உள்ளிட்டோருக்கெதிரான வழக்கில் பிரதான சாட்சியிடம் விசாரணை

by admin


பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் பிரதான சாட்சியான ரொஹான் அபய ஈரியகொல்லவிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கிடைத்த 30 மில்லியன் ரூபா பணத்தினை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்ததாக நாமல் ராஜபக்ஸ உள்ளிட்டேர்ருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன் போது வழக்கின் பிரதான சாட்சியான ரொஹான் அபய ஈரியகொல்ல நிதி மோசடி விசாரணைப் பிரிவினருக்கு வழங்கிய வாக்குமூலங்களில் இரண்டு பொய்யானது என நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.  இதனையடுத்து வழக்கு எதிர்வரும் நவம்பர் 30ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More