பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிசை வடகொரியா வருமாறு அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2000-ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியான கிம் ஜாங் உல் அப்போதைய பாப்பாண்டவரான இரண்டாம் ஜோன் போலுக்கு அழைப்பு விடுத்து இருந்திருந்த நிலையில் இரண்டாம் ஜோன் போல் வடகொரியா சென்றிருந்தார்.வரலாற்றில் இதுதான் வடகொரியாவுக்கு பாப்பாண்டவர்; சென்ற முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.
இந்நிலையில், தற்போதைய பாப்பாண்டவருக்கு கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அடுத்த வாரம் வத்திகான் செல்ல உள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே போப் பாப்பாண்டவரிடம் தெரிவிப்பார் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.