Home இலங்கைவடமாகாண சபையில்; 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன

வடமாகாண சபையில்; 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடமாகாண சபையின் 5 வருட காலப்பகுதியில் 437 பிரேரணைகளும் 19 நியதிக் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறுகையில்,

வடமாகாணசபை தனது 5 வருட ஆட்சிக்காலத்தில் 133 அமர்வுகளை இதுவரை நடாத்தியுள்ளது. எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வு 134வது இறுதி அமர்வாகும். இதுவரை நடைபெற்ற 133 அமர்வுகளில் 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவற்றுள் தமிழ்ர்கள் மீதான இனப்படுகொலை மற்றும் தாக்குதல்கள் தொடர்பான 6 முக்கியமான பிரேரணைகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் மக்கள் நலன் சார்ந்த 437 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதேபோல் குறைநிரப்பு நியதிச்சட்டங்களும் உள்ளடங்கலாக இதுவரை 29 நியதிச்சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.மேலும் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களில் பாலி ஆற்றிலிருந்து யாழ்.குடாநாட்டுக்கு நீரை கொண்டுவரும் தீர்மானம் எனக்கு ஆத்ம திருப்தியை கொடுத்துள்ளது.

அதனை நான் கொண்டுவந்தேன் என்பதற்கும் அப்பால் அதன் ஊடாக மக்கள் அடையவுள்ள நன்மைகளின் அடிப்படையில் அந்த தீர்மானம் மிக முக்கியமானது. மேலும் அந்த தீர்மானமாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படுகின்றது.இந்த திட்டம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிறைவேற்றப்படும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More