177
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஹெராயின் உட்பட போதை பொருளை உடமையில் வைத்திருந்த மூவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மானிப்பாய் பிப்பிலி மயான பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை மானிப்பாய் காவற்துறையினர் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இருவரின் உடமையில் இருந்து 550 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளும் , மற்றுமொருவரின் உடமையில் இருந்து 50கிராம் கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.
கைதான மூவரும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் , மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மானிப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.
Spread the love