பசுபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில்; இன்று ரிக்டர் அளவில் 6.3 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தினையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரித்தானியாவிக்; கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.