ஆந்திரா மாநிலத்தின் ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மாவட்டங்களில் ரிட்லி புயல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புயலினால் முக்கிய நகரங்களை இணைக்கும் வீதிகள் துண்டிக்கப்பட்டு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ரிட்லி புயல் ஆந்திராவின் கலிங்கப்பட்டினம் இடையே வங்கக் கடலில் சுமார் 200 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
இன்று அதிகாலை ரிட்லி புயல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்த போது மணிக்கு சுமார் 140 கி.மீ. முதல் 150 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதனால் ஒடிசா கடலோர பகுதிகளில் குறிப்பாக கோயில்பூர் பகுதியில் புயல் தாக்கம் ஏற்பட்டது.
மிக பலத்த மழை காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் மின் கம்பங்களும் சரிந்து வீழ்ந்துள்ளன.
இந்தநிலையில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மற்றும் விஜயநகரம் மாவட்டங்களில் டிட்லி புயலினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் மேலும் இந்த மாவட்டங்களில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.