பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமனிலையில் நிறைவடைந்துள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் முதல் இன்னிங்சை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
அந்தவகையில் 280 முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது. எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து 462 என்ற இலக்குடன் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலியா நேற்றைய 5 நாள் போட்டியின் போது 7 விக்கெட் கைவசம் இருந்த நிலையில் 326 ஓட்டங்கைளப் பெற வேண்டிய நிலையில் விளையாட்டினை ஆரம்பித்தது. இறுதியில் அவுஸ்திரேலிய அணி 139.5 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 362 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டம் சமனிலையில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.