சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற சோயஸ் ரொக்கெட் புறப்பட்ட சில நொடிகளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து அவசரமாக தரையிறக்கப்பட்டமை தொடர்பாக ரஸ்ய அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
ரொக்கெட்டில் இருந்த ரஸ்ய விண்வெளி வீரரான அலெக்ஸி மற்றும் அமெரிக்காவின் நிக் ஹேக் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆறு மாதங்கள் பணிபுரிவதற்காக அவர்கள் செல்ல இருந்தனர். ரொக்கெட் புறப்படும் போது சரியாக இருந்தாலும், அடுத்த 90 நொடிகளில் அதில் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருப்பதாக அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தெரிவித்ததனைத் தொடந்து ரொக்கெட் மத்திய கஜகஸ்தானில் ஷெஷ்காஸ்கானின் நகரத்திற்கு அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது.