இலங்கை பிரதான செய்திகள்

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சிக்குத் தீர்வு..

குச்சவெளி சித்திவிநாயகர் ஆலய காணியை தொல் பொருள் திணைக்களம் அபகரிக்க எடுத்த முயற்சி ஆலய நிர்வாக சபையினர் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டு தமது ஆவணங்களை சமர்பித்தன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஆலயத்திற்கு சொந்தமான காணி மற்றும் அங்கு தொல் பொருள் திணைக்களத்துடன் தொடர்வுடையதாக கூறப்பட்ட கற்துாண் போன்றவற்றை நேரில் சென்று பார்வையிட்டுள்ள தொல்பொருள் திணைக்கள தலைமை அலுவலக அதிகாரிகள் தமக்கு குச்சவெளியில் உள்ள இன்னுமொரு தொல் பொருள் சின்னங்களுடன் தொடர்புடைய காணி தொடர்பாகவே முறைப்பாடு கிடைத்ததாக தெரிவித்துள்ளனர்.
எனினும் சில பௌத்த மதகுருமார் இக்காணியில் உள்ள கல்துாண் தொடர்பாக தெரியப்படுத்தியதன் காரணமாக இக்காணியில் விவசாய நடவடிக்கைக்கு தம்மால் தடைவிதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினர் இயல்பான நடைவடிக்கைகளை இக்காணிக்குள் மேற்கொள்ளுமாறும் குறித்த காணி தொல்பொருளுடன் சம்மந்தம் இல்லை என்னும் அறிக்கையினை தாம் சம்மந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு வழங்குவதாகவும் குறித்த அதிகாரிகள் தெரிவித்துச் சென்றதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.