குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
இராணுவத்தினரிடம் கணிணி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
கிளிநொச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கணிணி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 11 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சியில் அமைந்துள்ள இராணுவத்தின் ஒத்துழைப்பு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சிங்கள மொழியில் தமது கணணி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், சிங்கள மொழி மூலம் எழுத்து பிரதிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன
இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை 8.30 மணியளவில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி.வி. ரவிப்பிரிய முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்