சவூதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி காணாமல் ஆக்கப்பட்டு கொல்லப்பட்டதனையடுத்து, சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரித்தானியா மற்றும் அமெரிக்கா யோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி துருக்கியில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்திற்கு சென்றதன்பின்னர் காணாமல் போயிருந்தார். அவர் சவூதி அரேபிய தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் சவூதி அNருபியா மறுத்து வருகின்றது.
அந்தவகையில் பத்திரிகையாளர் ஜமால் மரணத்துக்கு சவூதி அரேபிய அரசுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டால், அமெரிக்கா சவூதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என அமெரிக்க ஜனாதிபதி; டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் ஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து கவலை தெரிவித்துள்ள நிதி ஆதரவாளர்கள் மற்றும் பல ஊடக குழுக்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் இந்த மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அமெரிக்க மற்றும் பிரித்தானிய அதிகாரிகளும் இந்த இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாமல் போகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் ஜமால், சவூதி அரசால் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டால் கூட்டு கண்டன அறிக்கை ஒன்றை வெளியிடவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய தூதர்கள் ஆலோசித்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது