பொலன்னறுவை மாவட்டத்தை மையப்படுத்தி இடம்பெற்ற 44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (14) பிற்பகல் பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
கடந்த 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய விளையாட்டு விழாவில் 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1543 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் 443 அதிகாரிகளும் பங்குபற்றினர். மிகச் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்கள் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டன.
25 வருட சேவையை நிறைவுசெய்த விளையாட்டுத்துறை அதிகாரிகளை பாராட்டி ஜனாதிபதியினால்; தங்க விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.