குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மற்றும் வன்முறைகளுடன் தொடர்புடைய குழுக்களை இலக்கு வைத்து யாழ். நகர் மற்றும் புறநகரான கொக்குவில், திருநெல்வேலி, நல்லூர் , கல்வியங்காடு பகுதிகளில் வீதிச் சோதனை மற்றும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.
வாள்வெட்டு குழுக்களுடன் தொடர்புடைய முக்கிய வன்முறையாளர்களை இலக்குவைத்து கடந்த வாரம் திடீர் சுற்றிவளைப்பினை கொக்குவில் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து இன்று திடீர் சோதனை இடம்பெறுகிறது.
நகர் பகுதியில் இருந்து செல்லும் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, பருத்தித்துறை வீதி மற்றும் மானிப்பாய் வீதி ஆகியவற்றில் 500 மீற்றருக்கு ஒரு இடத்தில் வீதி தடைகள் போடப்பட்டு ஒவ்வொரு இடங்களிலும் 20ற்கும் காவல்துறையினர் இறக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்படுகிறது.
இந்த சோதனை வாள்வெட்டு குழு மற்றும் வன்முறை குழுக்களை இலக்கு வைத்தே இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.