இலங்கையின் சிரேஷ்ட வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்க தனது மீள்வருகையின் பின்னர் நான்கு போட்டிகளில் 10 விக்கெட்டுகளை கைப்பற்றியபோதும் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத்தில் தனக்கு விளையாட சந்தர்ப்பம் கிடைக்குமா என்பது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மலிங்க, தனக்கு அண்மைய காலத்தில் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகக் கிண்ணத்தில் வாய்ப்புக் கிடைக்குமென தான் எதிர்பார்க்கவில்லையெனவும் தான் அடுத்த போட்டி குறித்து மாத்திரமே கருத்திற் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
எனினும் உலகக் கிண்ணத்தில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் விளையாடுவேன் எனவும் அதுவே தனது இறுதி உலகக் கிண்ணமாக இருக்கும் எனவும் மலிங்க தெரிவித்துள்ளார்.