பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் விக்டோரியா மாரினோவா (Viktoria Marinova) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ரூஸ் நகரின் டிவிஎன் செய்தித் தொலைக்காட்சியின் இயக்குநராகப் பணிபுரிந்த விக்டோரியா, ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் நிதியில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாகச் செய்திகள் வெளியிட்டுவந்திருந்த நிலையில் அவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டிருந்தார்.
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு பத்திரிகையாளர் குரல் ஒடுக்கப்படும்போது, அந்த நாடே வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கிறதென ஐரோப்பிய நாடாளுமன்றத்திலும் இதுகுறித்த கவலை வெளிப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டனியோ குட்டாரசும்; கண்டனம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது