நடிகர் பாக்கியராஜூம் கலந்து கொண்டார்!!
கிளிநொச்சி மண்ணிலேயே வீரத்தமிழர்கள் வாழ்ந்ததாகவும், இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள இயக்குநர் இமயம் பாரதிராஜா மேலும் வீரம் விளைந்த மண்ணில் நின்று இக்கலைஞர்களைப் பாராட்டுவது எமக்கு மேலும் பெருமையைத் தேடித்தருகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புகைப்படப்பிடிப்பாளர்களைக் கௌரவிக்கம் நிகழ்வு இன்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுக்காக தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, இயக்குனரும் நடிகருமான பாக்கிராஜ் ஆகியோர் கிளிநொச்சிக்கு வருகை தந்து கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் உரையாற்றிய இயக்குனர் பாரதிராஜா, இலங்கையில் இந்த மண்ணிலேயே வீரத் தமிழன், வீரத் தமிழச்சி வாழ்ந்ததாகவும், வாழ்வதாகவும் அவர் உணர்ச்சிபூர்வமாக கருத்துத் தெரிவித்திருந்தார். இதேவேளை இலங்கை தனக்கு மிகவும் நெருக்கமுள்ள நாடு என்று இயக்குனர் பாக்கியராஜ் தெரிவித்தார். இருவரும் நிகழ்வில் அரசியல் சார்ந்த பேச்சுக்களை தவிர்த்துக் கொண்டனர்.
கிளிநொச்சி புகைப்படப்பிடிப்பாளர் சங்கத்தினர், மாவட்டத்தில் புகைப்படத்துறையில் ஆர்வமாகச் செயற்பட்ட மூத்த புகைப்பட கலைஞர்களை கௌரவிக்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் உள்ளிட்ட குழுவினர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.