173
உலகம் முழுவதும் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூரியூப் இணையதளம் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது. சேவரில் ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இவ்வாறு செயலிழந்து காணப்பட்டதாகவும் தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாக யூரியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து யூரியூப் அதன் ருவிட்டர் பக்கத்தில், நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Spread the love