இந்திய ராணுவத்தின் முக்கிய தரவுகளை பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ புலனாய்வு அமைப்புடன் பகிர்ந்து கொண்டதாக, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டில் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக பாகிஸ்தான் அவரை இந்தியாவுக்கு அனுப்பியிருக்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய ராணுவத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றும் அவரது பெயர் மற்றும் தகவல்களை ராணுவத் தரப்பு வெளியிடவில்லை. அவர் அடிக்கடி பாகிஸ்தானில் இருப்பவர்களுடன் தொலைபேசியில் பேசியதனையடுத்து ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்கு சந்தேகம் ஏற்பட்டதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளர்h.
அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது பல்வேறு ராணுவ ரகசியங்களை சேகரித்து பாகிஸ்தானுக்கு வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கி வரும் பல்வேறு அமைப்புகளுடன் கடந்த சில மாதங்களாக தொடர்பில் இருந்து வரும் அவர், சமூக வலைத்தளம் மூலம் முக்கியமான ராணுவ ரகசியங்களை அவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் தொடர்ந்து அவரை காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.