“ஹைப்ரட் சுத்தா” எனப்படும் சமீர ரசாங்க குணசேகர 1.100 கிலோகிராம் ஹெரோய்னுடன் இன்று அதிகாலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
37 வயதான குறித்த சந்தேகநபர், பாதுக்க- நெட்டிஒலுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 7,50,000 ரூபாய் பணமும் இரண்டு கார்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவற்துறை ஊடகப் பிரிவு சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 13 மில்லியன் பெறுமதி எனவும் தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, மரணத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் கையாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.