சவூதி அரேபியாவில் காணாமல் போன பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வருபவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி என்பவர் அண்மையில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றநிலையில் காணாமல் போயிருந்தார்.
அவர் தூதரகத்துக்குள் வைத்து கொல்லப்பட்டு விட்டார் என பல தரப்பினாலும் குற்றளம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையில சவூதி அரேபியா மறுத்து வருகிறது.இதேவேளை , பத்திரிகையாளர் ஜமால் கொலை செய்யப்படும் வீடியோ வெளியாகி உள்ளதாக துருக்கி அரச நாளிதழ் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றையதினம் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும் பட்சத்தில் அது மிகவும் துயரமானது. சவூதி அரேபியா அதற்கான கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.