குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வவுனியா நகர சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) பொதுக் குழு உறுப்பினருமான திருமதி லக்ஸ்சனா நாகராஜனினால் ஆலயங்களுக்கான நிதி உதவிகள் நேற்று (19) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ‘கம்பெரலிய வேலைத்திட்டம் 2018’ நிதி ஒதுக்கீட்டில் வவுனியா நகர சபை உறுப்பினர் திருமதி லக்ஸ்சனா நகராஜனின் வேண்டு கோளுக் கிணங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான அனுமதியும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிதி ஒதுக்கீட்டிற்கு அமைவாக வவுனியா வைரவ புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்திற்கு 4 இலட்சம் ரூபாவும், குட்செட் வீதி கருமாரி அம்மன் ஆலயத்திற்கு 5 இலட்சம் ரூபாவும், கற்குழி முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு 5 இலட்சம் ரூபாவும், சூசைப்பிள்ளையார் குளம் சகாயமாதா ஆலயத்திற்கு 5 இலட்சம் ரூபாவும், பத்தினியார் மகிழங்குளம், தாண்டிக்குளம் முனியப்பர்ஆலயத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.