அபுதாபியில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி 373 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தநிலையில் 282 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து அவுஸ்திரேலியா முதலாவது ; இன்னிங்சில்145 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து 137 ஓட்டங்கள் முன்னிலையுடனஇரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் 9 விக்கெட்டுக்கு 400 ஓட்டங்கரளப் பெற்றநிலையில் ஆட்டத்தினை நிறுத்திக் கொண்டது. இதனைத்தொடர்ந்து, 537 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலியா 49.4 ஓவரில் 164 ஓட்டங்களை; பெற்ற நிலையில் சகல விழக்கெட்டுக்களையும் இழந்தது. இதனையடுத்து, 373 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது