ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்த நிலையில் அதற்கான அரசாணையும பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று ஜனவரி முதலாம் திகதி முதல் பிளாஸ்டிக்கிலான பைகள், தட்டுகள், குவளைகள், ஸ்ட்ரோக்கள் போல ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான தடை அமுலுக்கு வருகின்றது.
இந்தத் தடைக்கெதிராக பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் உயர் நீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தியிருந்த போதிலும் நீதிமன்றம் தடைக்கு ஆதரவாகவே தீர்ப்பளித்திருந்தது.
மேலும் இத்தடையிலிருந்து பால், தயிர், எண்ணெய் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உறைகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள், துணிப் பைகளைப் பயன்படுத்துமாறு வர்த்தகர்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகின்றது.