Home பிரதான செய்திகள்அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித் கான் சாதனை

அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ரஷித் கான் சாதனை

by admin


இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் ரஷித் கான் சாதனை படைத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும், இருபதுக்கு 20 போட்டிகளிலும், ஐபிஎல், பிக் பாஷ், பாகிஸ்தான் லீக், பங்களாதேஸ் லீக் அனைத்திலும் ரஷித் கான் தனது பந்துவீச்சில் முத்திரை பதித்துள்ளார்.

மேலும் மிகக்குறைந்த வயதில் விரைவாக ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும் ரஷித் கான் பெற்றுள்ளார். 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஷித் கான் 118 விக்கெட்டுகளையும், 35 இருபதுக்கு 20 போட்டிகளில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள அவர் மொத்தமாக 142 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி 214 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டில் இருபதுக்கு 20 போட்டிகளில் அதிகமான 94 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்த ரஷித் கான் தற்போது பிக்பாஷ் லீக் தொடரில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் விளையாடி வரும் நேற்றையதினம் 34 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதன் மூலம் 2018-ம் ஆண்டில் இருபதுக்கு 20 போட்டிகளில் 96 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரஷித் கான் சாதனை படைத்துள்ளார். இதுவரை இருபதுக்கு 20 போட்டிகளில் எந்த ஒருவரும் இந்த சாதனையைச் செய்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More