சாங் இ-4 ( chang’e E-4 ) விண்கலம் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. நிலவின் ஒரு பகுதி மட்டுமே எப்போதும் பூமியை நோக்கி உள்ள நிலையில் அதன் மற்றைய பகுதியின் பெரும்பாலானதினை பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை காணப்படுவதனால் அந்தப் பகுதியை நிலவின் இருண்ட பகுதி என அழைக்கப்படுகின்றது. .
அந்தப் பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முதல் முறையாக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சீனாவின் சாங் இ-4 விண்கலம் கடந்த 8 ஆம் திகதி விண்ணில் ஏவப்பட்டது. தொடர்ந்து நான்கு நாள்களாக பூமியை வட்டமிட்ட அந்த விண்கலம், கடந்த 12 ஆம் திகதி நிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு நுழைந்தது.
இந்த நிலையில், நிலவின் இருண்ட பகுதியில் தரையிறங்குவதற்கு ஏற்ற வகையில், சாங் இ-4 விண்கலத்தின் வட்டப் பாதை, நீள்வட்டப் பாதையாக ஞாயிற்றுக்கிழமை மாற்றியமைக்கப்பட்டதனடிப்படையில் குறித்த விண்கலம் இன்று தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.