இந்திய அணித் தலைவர் விராட் கோலி, அதிவேகமாக ஓட்டங்களைப் பெற்று சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். சிட்னியில் நடைபெற்று வரும் இந்தியா, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 23 ஓட்டங்களுடன் வெளியேறியிருந் போதிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 19 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையைப் பெற்று, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டில் பல்வேறு சாதனைகளை விராட் கோலி படைத்திருந்த போதிலும், 2019-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே கோலி படைக்கும் முதல் சாதனை இதுவாகும். சச்சின் டெண்டுல்கர் தனது ஒட்டுமொத்த இருபதுக்கு 20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேசப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை 432 இன்னிங்ஸ்களில் எட்டியிருந்தார். ஆனால், விராட் கோலி தனது 19 ஆயிரம் ஓட்டங்களை சச்சினைக் காட்டிலும் 33 போட்டிகள் குறை வாக 399 இன்னிங்ஸ்களிலேயே இன்று எட்டி புதிய சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது