Home இலங்கை கடும் பனிமூட்டம் – டெல்லியில் விமான புறப்பாடுகள் நிறுத்தம்….

கடும் பனிமூட்டம் – டெல்லியில் விமான புறப்பாடுகள் நிறுத்தம்….

by admin

கடும் பனிமூட்டம் காரணமாக இன்று காலை டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ள நிலையில் கடுமையான குளிர் நிலவிவரும் அதேவேளை போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக டெல்லியில் இன்று விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. காலை 7.30 மணி முதல் டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டதுடன் டெல்லிக்கு வந்த மூன்று விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.  இதனையடுத்து டெல்லியில் இருந்து வெளியூர் செல்வதற்கு முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு அந்தந்த விமான நிறுவனங்கள் சார்பில் பயணிகள் விமான நிலையத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக, பயணம் செய்யவேண்டிய விமானத்தின் நிலவரத்தை சரிபார்த்துக்கொள்ளும்படி கூறப்பட்டுள்ளது. மேலும் வானிலை சீரடைந்ததும் விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More