சீனாவில் தொடர் கொலையாளி ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. உறவினரின் டி.என்.ஏ பரிசோதனை மூலம் இவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவோ செங்கியாங் என்னும் குறித்த கொலையாளி கொலை செய்யும் முன்பு சிறுமிகள் மற்றும் பெண்களை பின்தொடர்ந்து சென்று அவர்களிடம் வழிப்பறி செய்வது மட்டுமல்லாது அவர்களை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பலரிடம் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொண்ட பின்னர் அவர் நடத்திவந்த மளிகைக் கடையில் வைத்து கடந்த 2016ஆம் ஆண்டு அவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்
இவர் 2002ஆம் ஆண்டே கொலைகள் செய்வதை நிறுத்திக்கொண்டாலும், பல ஆண்டுகளுக்குப் பின்னர் இவரது உறவினர் வேறொரு சிறு குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட போதே இவரைப் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அவரால் கொல்லப்பட்டவர்களிலேயே மிகவும் இளம் வயதுடைய சிறுமியின் வயது எட்டு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று வியாழக்கிழமை காவோவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அது எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.