Home இந்தியாபீகாரில் கடும் மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி- 15 பேர் காயம்

பீகாரில் கடும் மூடுபனியால் வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி- 15 பேர் காயம்

by admin

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூடுபனி காரணமாக நெடுஞ்சாலையில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர் .

வடமாநிலங்களில் கடுமையான குளிர் நிலவிவருகின்ற  நிலையில் பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலையில் கண்ணை மறைக்கும் அளவுக்கு மூடுபனி இருப்பதால் வாகன சாரதிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதுடன் சில சமயங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்றுமோதி விபத்துக்குள்ளாகின்றன.

இந்நிலையில் இன்று காலை பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற பெட்ரோல் டேங்கர் பாரவூர்தி உள்ளிட்ட 9 வாகனங்கள் பனி மூட்டம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More