ஏமன் நாட்டில் அமெரிக்க படையினர் ஆளில்லா விமானம் மூலம் மேற்கொண்ட தாக்குதலில் அல் கொய்தா தீவிர இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஏமன் நாட்டின் அல் பய்டா மாகாணத்தில் சில பகுதிகளை அல் கொய்தா இயக்கம் கைப்பற்றி உள்ள நிலையில் அந்த இயக்கத்தின் உள்ளூர் தளபதியாக படாவி இருந்து வந்தார்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு ஓக்டோபரில் எரிபொருள் நிரப்பி கொண்டிருந்த யூ.எஸ்.எஸ். கோல் என்ற அமெரிக்க போர் கப்பலின் மீது தாக்குதல் மேற்கொண்டு 17 அமெரிக்க கப்பற்படை வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்த இயக்கத்தின் ஆதிக்கம் நிறைந்த அல் பய்டா பகுதி வழியே தனியாக வாகனம் ஒன்றில் படாவி சென்று கொண்டிருந்த போது அவர் மீது அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதில் அவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும் இந்த தகவலை ஏமனை சேர்ந்த அல் கொய்தா இயக்கம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment