Home உலகம் ஜமாலின் கொலை தொடர்பில் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா – ஐநா

ஜமாலின் கொலை தொடர்பில் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா – ஐநா

by admin
 

ஊடகவியலாளர் ஜமால் கசாக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சவூதி அரேபியா மேற்கொள்ளும் விசாரணைகள் முறையாக நடைபெறுகின்றதா என்பது குறித்த தகவல் இல்லை என ஐ.நா.வின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜமால் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 5 சவூதி அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு அரச வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் சவூதியில் இந்த விசாரணை முறையானதாக நடைபெறுகிறதா என்ற தகவலை இதுவரை பெற முடியவில்லை என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரவினா தெரிவித்துள்ளார்.

மேலும் சவூதியில் நடைபெறும் இந்த விசாரணை சர்வதேச அளவிலான தலையீடுகளுடன் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் மரண தண்டனையை விரும்பாது எனவும் தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்தவரும் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான 59 வயதான ஜமால் கசோக்கி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்துக்கு சென்றநிலையில் கொல்லப்பட்டிருந்தார்

இந்தக் கொலை தொடர்பாக சவூதி இளவரசர் முகம்து பில் சல்மான் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் ஐந்து பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

1 comment

Suhood MIY. Mr. January 5, 2019 - 6:29 am

In terms of International law, the incident must be have a trial with culprits, and punishment must be executed at the land where the incident was occurred. In this case all the countries must give pressures to Saudi. Turkey has imminent responsible over it. Otherwise in future, Saudi itself become slave for their judicial administration; and have to pay tremendous compensation for all expatriates killed in the Saudi soil for various offences..

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More