Home பிரதான செய்திகள்ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று இந்தியா – தாய்லாந்து போட்டி…

ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் இன்று இந்தியா – தாய்லாந்து போட்டி…

by admin


ஆசிய கிண்ண கால்பந்து தொடரில் அபுதாபியில் இன்றையதினம் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் தாய்லாந்து அணிகள் போட்டியிடவுள்ளன. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று தாய்லாந்துடன் போட்டியிடுகின்றது.

பிபா தரவரிசையில் இந்திய அணி 97-வது இடத்திலும், தாய் லாந்து 118-வது இடத்திலும் உள்ளன. இதுவரை இரு அணிகளும் 24 முறை நேருக்கு நேர் போட்டியிட்ட நிலையில் தாய்லாந்து 12 போட்டிகளிலும் இந்தியா 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றதுடன் 7 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More