சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனம் செய்த விவகாரத்தால் கேரள மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ள நிலையில் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொருக்கப்படுவதும், வெடிகுண்டுகள் வீச்சு சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன.
இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தில் உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி என்ற இடத்தில் இருக்கும் அவருடைய வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அத்துடன் தலச்சேரி பகுதியில் இருக்கும் கம்யூனிஸ்ட் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் வீடுகளுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது