தங்களின் விவாகரத்து தகவல்களை பெண்கள் அறியமுடியாமல் போவதை தடுக்க, சவூதி அரேபியா புதிய நடைமுறை ஒன்றினை அமுல்படுத்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முதல், விவாகரத்து வழக்கின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டமை குறித்த தகவலை குறுஞ்செய்தியாக பெண்களுக்கு நீதிமன்றங்கள் அனுப்பி வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கைகள், மனைவியிடம் தெரிவிக்காமலேயே விவாகரத்து பெறும் ஆண்களின், இரகசிய விவாகரத்துகளைத் தடுக்கும் என உள்ளூர் பெண் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த முடிவானது பெண்கள் தங்களின் திருமண நிலை குறித்த முழு விவரத்தை அறிந்திருக்க உதவுவதோடு, ஜீவனாம்சத்திற்கான தங்களின் உரிமைகளை காத்துக்கொள்ளவும் உதவும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு, சவூதி அரேபிய பெண்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான தடை விலக்கிக்கொள்ளப்பட்ட போதிலும், இன்னும் ஆண்களின் பாதுகாப்பு சட்டத்திற்கு கீழே பெண்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதுர்