ஆப்கானிஸ்தானில் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் என்ற மாகாணத்தில் இன்று தங்கச் சுரங்கம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்தபோது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது
விபத்து தொடர்பான தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மக்களால் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் . தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது