இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றமை தொடர்பில் காவற்துறை உளவாளியான நாமல் குமாரவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவரைக் கைதுசெய்யவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமல் குமார தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினரால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் நிறைவுற்றதன் பின்னர் இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு எதிராக இராணுவத் தரப்பினரால் டீமற்கொள்ளப்படும் ; நடவடிக்கைகள் நாமல் குமாரவுக்கு எதிராகவும் எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போலி சான்றிதழ்கள் மூலம் இராணுவம் மற்றும் வான் படைகளில் இணைந்து பின்னர் பயிற்சியின்போது தப்பியோடியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது